ரஷ்ய தினத்தை முன்னிட்டு ரஷ்யநாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "இந்தியாவும் ரஷ்யாவும் நீண்டகாலமாக நல்லுறவை கொண்டுள்ளது.

இருநாட்டு மக்களுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. இந்த உறவு மேலும் சிறக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் 'ரஷ்யதினத்திற்கு' எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஆங்கிலம் மற்றும் ரஷ்யமொழிகளில் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பிரிக்ஸ் மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (sco) ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply