மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டில், மருந்து பெயர்களை பெரிய ஆங்கில எழுத்தில் எழுதித்தர வேண்டும் என்ற புதிய நடை முறையை மத்திய அரசு கொண்டுவர பரிசீலித்து வருகிறது.

மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகளின் பெயர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறுமருந்துகள் கொடுக்கப்படும் விபரீதம் நடப்பதை தடுக்கும்வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் ஒரு அரசாணையைப் பிறப்பிக்க உள்ளது.

இதில், மருத்துவர்கள் மருந்தின்பெயர்களை பெரிய ஆங்கில எழுத்தில் எழுதவேண்டும் என்பதோடு, மருந்தில் சேர்க்கப்படும் மருந்து பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட உள்ளது.

Tags:

Leave a Reply