பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் இரண்டு சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப் படுத்தினார். அதாவது, பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா ஆகிய காப்பீட்டு திட்டங்களையும், அடல்பென்சன் யோஜனா என்ற பென்சன் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், இந்த சமூகபாதுகாப்பு திட்டங்களில் இதுவரை 10.17 கோடி பேர் இணைந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது, வெறும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே 10 கோடி பேர் பிரதமரின் காப்பீட்டு திட்டங்களிலும், 2 லட்சம்பேர் அடல்பென்சன் திட்டத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களை தனியார் வங்கிகளும்கூட வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply