பிரதமர் நரேந்திர மோடியை நாகா பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமை சந்தித்து பேசினர். அப்போது மோடியிடம், வடகிழக்கு பிராந்தியம் எங்கும் அமைதி நிலவுவதற்கு தாங்கள் உறுதிபூண்டிருப்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
நாகா ஹோஹோ அமைப்பை சேர்ந்த 6 பேர்கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், அதன் தலைவர் சுபா ஒஜுகும் தலைமையில் தில்லியில் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

வட கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அந்தக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். வட கிழக்குப் பிராந்தியம் முழுவதிலும் அமைதி நிலவுதற்கு தாங்கள் உறுதிபூண்டிருப்பதை அவர்கள் எடுத்துரைத்தனர் என பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply