ஏப்ரல் மாதத்திற்கான தொழில் உற்பத்திவளர்ச்சி இரண்டு மாதங்களில் இல்லாத வகையில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்திதுறையில் உள்ள 22 தொழில்களில் 16 தொழில்கள் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் வளர்ச்சி பாதையில் உள்ளன.

குறிப்பாக, இயந்திர தளவாடங்கள் உற்பத்திதொழில் அதிகபட்சமாக 20.6 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதே போல், தச்சு மற்றும் மரப்பொருட்கள், பர்னிச்சர்தொழில்கள் 16.2 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. இது தவிர, அலுவலகம், அக்கவுண்டிங் போன்றவை 36.5 சதவீதம் அளவுக்கு கடும்வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதேபோல், ரேடியோ, டி.வி, தகவல்தொடர்பு சாதனங்கள் ஆகியதுறைகள் 34 சதவீதமும், புகையிலை பொருட்கள் சார்ந்ததொழில்கள் 26.7 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Tags:

Leave a Reply