ஜூன் 16-ல் பாஜக செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தூய்மை இந்திய திட்டவிளக்க ஊர்தியை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அதற்கு பிறகு தமிழிசை பேசுகையில், '' ஆர்.கே.நகரில் தேர்தல்தேதி அறிவித்தபிறகு வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெறாது என்பதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. காணொலி முதல்வரைவிட நேரில் சந்திக்கும் முதல்வரையே மக்கள் விரும்புகின்றனர். பாஜக செயற்குழுகூட்டம் ஜூன் 16-ல் கும்பகோணத்தில் நடைபெறும்'' என்று பேசினார்.

Leave a Reply