பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சிபொறுப்பு ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மத்திய அரசின் ஓராண்டுசாதனைகள் குறித்து மக்களிடையே விளக்கிகூற மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புதுறை சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:–

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் எந்த வித ஊழலும் நடைபெறவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல் படுத்தப்பட்டு உள்ளது. இதில் இருந்து பா.ஜ.க சிறந்த நிர்வாக ஆட்சியை கொடுத்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளலாம்.

நாட்டில் விவசாயிகள், பெண்கள், ஏழை எளியமக்கள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தி உள்ளோம்.

யோகா செய்வதற்கு மதபேதம் எதுவும் தேவையில்லை. சர்வதேச யோகாதினம் வருகிற 21–ந் தேதி வருகிறது. அந்நாளில் நாடுமுழுவதும் யோகாவை வரவேற்கும் வகையில் சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

யோகா தினத் தன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அமைச்சர்கள் சென்று சிறப்பாககொண்டாட உள்ளனர்.. யோகாவை உடற் பயிற்சியாக கருதி அனைவரும் யோகா செய்யவேண்டும்.என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.

Tags:

Leave a Reply