அணு உலைகளில் விபத்து ஏற்படும்பட்சத்தில் இழப்பீடு அளிப்பதற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு தொகுப்பு நிதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

அணு எரி பொருளை வழங்கும் வெளிநாடுகளின் சுமையை குறைக்கும்நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, மத்திய அணு சக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர்சிங் தெரிவித்தார்.

இந்த தொகுப்புநிதி இதுவரை இல்லாததால், கோரக்பூர் போன்ற அணுமின் திட்டங்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், இத்திட்டங்கள் அனைத்தும் தொகுப்புநிதி உருவானதும் முன்னெடுத்து செல்லப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜிதேந்தர்சிங் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply