முதல் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் யோகாகுரு ராம்தேவ் ஏற்பாடு செய்துள்ள 2 நாள் யோகா ஒத்திகை நிகழ்ச்சியில், மாநிலமுதலமைச்சர் மனோகர் லால்கட்டார், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, யோகா செய்தனர்.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சிறப்புயோகா பயிற்சியில், மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியினை செய்தனர்.

இதேபோல், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதல் உலகயோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில், யோகாமுகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, வரும் 21ம் தேதி ஷிம்லாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply