ஆர்கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் இது வரை எந்த இடைத்தேர்தலும் நியாயமாக நடைபெற வில்லை. ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை.

அதனால் தான் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்தோம். தமிழகத்தில் 2016ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது.

தமிழகத்தில் உரத்தட்டுப் பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உரத்தொழிற்சாலை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Leave a Reply