ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி போர்ச்சுகல் செல்வதற்கு விசாவழங்குமாறு, பிரிட்டன் அரசை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டு கொண்டதாக வெளியான தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சுஷ்மாவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ்நாத்சிங் கூறுகையில்,

"லலித் மோடிக்கு நுழைவு இசைவுவழங்கும் விவகாரத்தை சுஷ்மா ஸ்வராஜ் சரியாகவே கையாண்டிருக்கிறார். அவருடைய நிலைப் பாட்டை மத்திய அரசு முழுவதுமாக ஏற்று கொள்கிறது. பிரிட்டன் அரசின் சட்டவிதிகள் அனுமதித்தால் மட்டுமே லலித்மோடிக்கு நுழைவு இசைவு வழங்கவேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

மனிதநேயமுள்ள எவரும் இந்த வழி முறையைத்தான் பின்பற்றி இருப்பார்கள். சுஷ்மா பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது," என்றார் ராஜ்நாத் சிங்.

லலித் மோடிக்கு உதவியது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ள விளக்கத்தில், "மனிதநேய அடிப்படையிலேயே லலித் மோடிக்கு உதவினேன். சட்டப்படி ஆராய்ந்து அவருக்கு விசாவழங்குமாறு அந்நாட்டுத் துணை தூதரிடம் தெரிவித்தேன். லலித்மோடிக்கு விசா வழங்குவதற்கு பிரிட்டன் அரசு முடிவு செய்தால், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படாது," என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply