காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளுக்கு தேசிய கண்ணோட்டத்திலேயே மத்திய அரசு தீர்வுகாணும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடுமுழுவதும் நதி நீர் திட்டங்களை மேம்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

காவிரி உள்ளிட்ட இருமாநிலங்கள் இடையிலான நதி நீர் பிரச்சனைகளுக்கு தேசிய கண்ணோட்டத்திலேயே பாஜக அரசு தீர்வு காணும் . பற்றாக்குறையை நீக்கி உபரிநீர் கிடைக்கும் வகையில் நதி நிர் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் ஜவடேகர் தெரிவித்தார். ஜல்லிகட்டு தொடர்பாக பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேகதாது பகுதியில் அணைகள் கட்டுவது குறித்து கர்நாடக அரசிடம் இருந்து தமதுகவனத்திற்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடைப்பேற்று வரும் பாஜக பொதுகுழு கூட்டத்தில் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளி்ட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Leave a Reply