நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதியசெயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன்மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொது மக்கள் பெறலாம்.

நவீன தகவல் தொழில்நுட்ப ஆர்வலரான பிரதமர் நரேந்திர மோடி, 'நரேந்திர மோடி மொபைல் ஆப்ஸ்' என்ற பெயரில் ஒருசெயலியை இன்று தொடங்கினார். ஆன்ட்ராய்டு செல்போன் உபயோகிப் பாளர்கள் இந்த செயலியை 'ஆன்ட்ராய்டு பிளேஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மோடி தொடர்பான அத்தனை தகவல்கள், படங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும். ''வாருங்கள், மொபைல்வழியாக தொடர்பில் இருப்போம்'' என அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply