பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரைவில் சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டின் போது இருதலைவர்களும் சந்தித்து பேசலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் வங்காளதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர், அங்கு பாகிஸ்தான் குறித்து தெரிவித்த கருத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வந்தநிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நவாஸ்ஷெரீபை தொடர்பு கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான பதட்டம் சற்று தணிந்து ள்ளதால், சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply