நாட்டின் உயர் பதவி களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று, மத்திய, மாநில அரசுகளின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளாக பலரும் பணியாற்றி வருகின்றனர். அரசுகளின் சார்பில் பணி நிமித்தமாக அல்லது வேறு சில காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் நாடுதிரும்பாமல் அங்கேயே தங்கி விடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

தாம் சார்ந்துள்ள அரசுகளின் செல்வாக்கை பயன் படுத்தி, இவர்கள் செல்லும் நாடுகளில் தனியார் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் சேர்ந்து கொள்கிறார்கள். தாங்கள் பணியாற்றிய அரசுகளிடம் முறையாக அனுமதி பெறாமல் இவ்வாறு சட்ட விரோதமாக தங்கிவிடும் செயலை தடுக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிலர், பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி சம்பாதித்தபின் மீண்டும் தங்கள் அரசுகளிடம் 'சமரசம்' பேசி இணைந்து கொள்கிறார்கள். இதை கவனத்தில்கொண்ட பிரதமர், இந்த அதிகாரிகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளார்.

இதற்காக அவர், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப் படுத்தும் மத்திய அரசின் நிர்வாகப் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பாத வர்களின் பட்டியல் மற்றும் விவரத்தை சேகரித்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.

பொதுவாக நம் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சட்ட திட்டங்கள் உறுதியாக இருப்பதுபோல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இல்லை. மத்தியில் புதிய அரசு பதவி யேற்கும் போதெல்லாம் இந்த பிரச்னை கிளப்படுவது உண்டு. ஆனால் இதன் மீது முதல் முறையாக பிரதமர் மோடி நட வடிக்கை எடுக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது"

நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 6,270 . இதில் தற்போது பணியில் இருப்பவர்கள் 4,799 மட்டுமே.

மத்திய அரசுக்கு தேவைப் படும் ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 952. ஆனால் தற்போது பணியில் இருப்பவர்கள் 643 மட்டுமே. சிவில்சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெறும் ஒருவருக்கு ஐஏஎஸ் பயிற்சிக்காக அரசு செலவழிக்கும் தொகை ரூ. 10 லட்சம் ஆகும். .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.