லலித் மோடிக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப் படுத்துகிறது. மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன்களுக்கு பதில் அளிக்க தவறியதற்காக லலித் மோடியின் பாஸ்போர்ட்டு பறிமுதல் செய்யப் பட்டிருந்தது. ஆனால் அந்த பாஸ்போர்ட்டை அவருக்கு திரும்பத்தர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமின்றி, லலித்மோடி மீது மத்திய அமலாக்க பிரிவின் 16 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தவழக்குகளில் விசாரணையை எதிர் கொள்வதற்கு லலித் மோடியை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டு வர மத்திய அரசு எண்ணியுள்ளதாகவும் அந்த தகவல் மேலும் கூறுகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசை மத்திய அரசு நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply