தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் 2 வது நாளாக கும்பகோணம்-தஞ்சை சாலையில் உள்ள ரிசார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது, அதில் சட்டரீதியிலான பிரச்சனை உள்ளதால் சில மறுசீரமைப்புகள் செய்ய வேண்டிவரும்.

உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த புதிய விதி முறைகளை வகுத்துள்ளது , அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரகாஷ் ஜவ்டேகர் குறப்பிட்டார். தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார் .

Leave a Reply