லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியது குறித்து முறையற்ற குற்றச்சாட்டுகள் வருவது கவலையளிக்கிறது. இதில், தர்க்க ரீதியான அடிப் படை ஏதுமில்லை. ஒரு மனிதாபி மான நடவடிக்கையாக கருணை அடிப்படையில்தான் அவர் தலையிட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்து விட்டனர். இதுகுறித்து மேலும் பேசுவதற்கு ஏதுமில்லை என்றார்.

Leave a Reply