வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இதனை யடுத்து நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் சிறப்புமுகாமில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ள உள்ளார்.

அவருக்கு முஸ்லீம் ஆசிரியர் யோகா பயிற்சி அளிக்க உள்ளார். பாட்னாவில் உள்ள மொய்னுல் ஹக் மைதானத்தில் நடை பெறும் முகாமில் கலந்துகொள்ளும் அமித்ஷாவுக்கு யோகா ஆசிரியர் முகமது தமனா மற்றும் அசோக்சர்கார் ஆகியோர் பயிற்சி அளித்து ஆலோசனைகள் வழங்குவார்கள் என பீகார் ஜார்க்கண்ட் மாநில பதஞ்சலி யோகாமைய பொறுப்பாளர் அஜித் குமார் கூறினார்.

Tags:

Leave a Reply