நவீன நகரங்கள் திட்டம், அனை வருக்கும் வீடுதிட்டம், நகர்ப்புற மேம்பாட்டுக்கான அடல்திட்டம் ஆகிய முக்கிய 3 திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி, தில்லி விஞ்ஞான் பவனில் வரும் 25-ம் தேதி முறைப்படி தொடக்கி வைக்கிறார்.

இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:
நவீன நகரங்கள் திட்டத்தின்கீழ் 100 புதியநகரங்களை உருவாக்கவும், நகர்ப்புற மேம்பாட்டுக்கான அடல் திட்டத்தின் கீழ், நாடுமுழுவதும் 500 நகரங்களை மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. நகர்ப்புற ஏழைகளுக்கான "அனைவருக்கும் வீடு' திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.4 லட்சம் கோடி மதிப்பீட்டிலான இந்த 3 திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, வரும் 25-ம் தேதி நடைபெறும் இத்திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார் என்று அந்தவட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:

Leave a Reply