நாளை அகில உலக யோகா தினம் அகில இந்தியக் கலையாக இருந்த யோகாவை அகில உலகக் கலையாக்கிய பெருமை நம் பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சாரும். இந்தக் கலை நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதுகாக்கக் கூடியது. ஆனால் மதம் வேறு மனிதம் வேறு. ஆனால் மனிதத்தைப் போற்றும் இந்தக் கலைக்கு மதச் சாயம் பூசுவது கவலையளிக்கிறது, கண்டிக்கத்தக்கதும் கூட.

நல்லது எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நம் அனைவருக்குமே இருக்க வேண்டும். இங்கே தமிழகத்தில் கூட சில காரணங்கள் காட்டி பல இடங்களில் மேற்கொள்ளப்படிருந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. நல்லது கூட நடக்க மறுக்கிறது என்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.

ஆனாலும் அனைவரும் யோகாவை ஓர் உடல் நலம், மனநலம் காக்கும் கலை என்ற வகையில் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். யோகா தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்துத்தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் கட்சி சார்பற்ற நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெறுகிறது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அந்தந்தப் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் இராயப்பேட்டையில் YMCA மைதானத்தில் யோகி சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நம் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. வெங்கைய்யா நாயுடு அவர்கள் அதிகாலை 6மணிக்கு கலந்து கொள்கிறார். நாம் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெருவோம். அது மட்டுமல்ல சென்னையில் பல இடங்களில் நிகழ்ச்சிகள் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படுகிறது. அதற்கும் நம் ஆதரவைத் தெரிவிப்போம்.

கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வோம். கலையைக் கற்போம். கவலையற்று வாழ்வோம். வாருங்கள்.

என்றும் மக்கள் பணியில்.

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply