பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் நடை பெறும் யோகா நிகழ்ச்சியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு ள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யோகா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

முதலாவது சர்வதேச யோகாதினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லி இந்தியாகேட் பகுதியில் உலக சாதனை படைக்கும் வகையில் சுமார் 35 ஆயிரம்பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

இதையடுத்து யோகா நிகழ்ச்சி நடை பெறும் இந்தியாகேட் பகுதியை சுற்றி சுமார் 5 ஆயிரம் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும் 30 கம்பெனி பாதுகாப்புபடை வீரர்களும் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரதமரும், மத்திய அமைச்சர்களும் 45 நிமிடங்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அப்போது 30,000 பேர் வரை இந்தியா கேட் பகுதியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

ராஜபாதை பகுதியில் காலை 7 மணிக்கு பிரதமர் கொடியேற்றி வைத்து யோகா நிகழ்ச்சியை தொடங்கிவைப்பார்.

Leave a Reply