பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மலை மீது உள்ள துர்கை கோயில் உட்பட பல இந்து கோயில்கள் கிரானைட் சுரங்கத்துக்காக இடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தார்பர்கார் மாவட்டத்தில் உள்ள நாகர்பர்கார் மலையில், துர்கை கோயில் உட்பட ஏராளமான இந்து மற்றும் ஜைன கோயில்கள் உள்ளன. இதில், பல கோயில்கள் 2000 முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கும்

இந்துக்கள் இக்கோயில்களுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

இந்நிலையில், அந்த மலையில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மலை மீது அமைந்திருக்கும் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மலையின் நான்குபுறமும் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் கோயில்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

“கிரானைட் கற்களுக்கான வெடிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் ஒரு மாதத்தில் கோயில் இடிந்துவிடும்.” என்று துர்கை கோயிலின் அறங்காவலர் வீர்ஜி கோஹ்லி தெரிவித்தார்.

“கடந்த வாரம், சிவராத்திரி நாளில் துர்கை கோயிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். அந்தநேரத்தில் மட்டும் மலையில் வெடி வைப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அப்பணியை தொடங்கியுள்ளனர்.” என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், அந்த மாகாணத்தின் இந்து எம்எல்ஏ ஒருவரும் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் கோயில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.