பயங்கரவாதிகள் அனைவரும் அறிவாளிகள்; சமூகத்துக்கு ஆக்கப் பூர்வமாக பணிகளை செய்யும்வகையில், தங்களது அறிவை நெறிப்படுத்த பயங்கரவாதிகள் யோகா மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

யோகாவால் ஏற்படும் நன்மைகளை விளக்கி தில்லியில் சனிக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அறிவுக் கூர்மை என்பது மிகவும் ஆபத்தானதாகும். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கும் நபர்களும், அறிவாளிகள் தான். அவர்களிடம் அறிவுக் கூர்மைக்கு எந்த குறைவும் இல்லை. பயங்கரவாத செயல்களில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் அறிவாளிகள் தான்.

ஆனால், அறிவுக் கூர்மையை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். பேரழிக்காக பயன்படுத்த கூடாது. அறிவுகூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகாசெய்யும். சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும்வகையில், தங்களது அறிவுக்கூர்மையை நெறிப்படுத்த பயங்கரவாதிகள் யோகா மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply