பாகிஸ்தான் யோகா தொடர்பான தனதுகருத்தை, பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.

சர்வதேச யோகாதினத்தை கடைபிடிக்காதது தொடர்பான கருத்தை பாகிஸ்தான் பரிசீலனை செய்யவேண்டும், யோகா பாகிஸ்தானுக்கு அமைதியை கொண்டுவர உதவியாக இருக்கும். மனித இனத்திற்கு யோகா என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை 190 உலகநாடுகள் ஒத்துக் கொண்டு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, இதில் 44 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். நியூயார்க், சீனா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் யோகா நடைபெறுவதை நீங்கள் பார்க்கமுடியும். பாகிஸ்தானும், யோகாவை தனது நாட்டில் எடுத்து செல்வதாக கருத்துகூறியது.

ஆனால் திடீரென்று அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் யோகா தொடர்பான தனது கருத்தை, பரிசீலனை செய்ய வேண்டும், யோகா பாகிஸ்தானுக்கு அமைதியை கொண்டுவர உதவியாக இருக்கும் என்று நாங்கள் எண்ணுகிறோம். என்று ரவிசங்கர்பிரசாத் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை கொண்டாட பாகிஸ்தானிலும் ஆரம்பகட்ட முயற்சிகள் எடுக்கபட்டது, இருப்பினும் கடைசியில் ரத்து செய்யப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply