உலகிலேயே மிகவு உயரமான போர்க் களம் சியாச்சினில் இருந்து, தெற்கு சீன கடலில் நிலை கொண்டு உள்ள போர்கப்பல் வரையில் இந்திய ராணுவவீரர்கள் யோகா பயிற்சில் கலந்து கொண்டனர்.

முதல் சர்வதேச யோகாதினம் இன்று இந்தியாவில் 650 மாவட்டங்களிலும், உலகின் 193 நாடுகளில் 192 நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. தலை நகர் டெல்லியில் ராஜ பாதையில் சர்வதேச யோகா தின விழா, பிரதமர் மோடியின் தலைமையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்திய முப்படை வீரர்களும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவதளபதி தல்பீர் சிங், விமானப்படை தலைவர் மார்செல் அருப் ராஹா, கடற்படை அட்மிரல் ஆர்.கே. தோவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்க மீரட்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்திய–பாகிஸ்தான் எல்லையில் இமய மலையில் உள்ள சியாச்சின் பனி சூழ்ந்த பகுதி ஆகும். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள போர்க் களம் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சில சமயங்களில் இங்கு மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும். இன்று காலையில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்குமேல், தரை விரிப்பை விரித்து ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். கார்கில், லாடக் உள்பட நாட்டின் பல்வேறுபகுதிகளில் ராணுவ வீரர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடற்படையும் சர்வதேசயோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. கடற்படை வீரர்கள் இந்திய போர் கப்பல்களில் யோகாவில் ஈடுபட்டனர். தெற்கு சீனகடல் பகுதியில் நிலை கொண்டு உள்ள இந்திய கப்பல்கள் அனைத்திலும், கடற்படைவீரர்கள் யோகாவில் கலந்து கொண்டனர். தெற்கு சீன கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள ஐஎன்எஸ். ரன்வீர், சத்புரா, கமோர்தா, சாக்தி, ஆகிய கடற்படை கப்பல்களிலும், ஐ.என்.எஸ். வீராட் கப்பலிலும் கடற்படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Tags:

Leave a Reply