தற்போதைய சந்தைகளில் 'தூய்மையான நெய்' என்று விளம்பரப் படுத்தி விற்பதுபோல் ஆழ் மனம் சார்ந்த புராதாணக் கலையான யோகாசனத்தையும் சந்தைப்படுத்தி விலைபொருள் ஆக்கிவிடாதீர்கள்.

அமைதியான புதுயுகத்தை உருவாக்க யோகா பயிற்சி உதவிசெய்யும். ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்த ஐ.நா. சபைக்கும் அதையேற்று இன்று முதலாவது சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்கும் உலக நாடுகளுக்கும் நன்றி.

பேராசை, வன்முறை, உடல் உபாதைகளை போக்கிகொள்ள செய்யப்படும் செலவினங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் யோகா முக்கிய பங்காற்றுகின்றது. கூட்டுமுயற்சி மற்றும் புவியின் சமச் சீர்நிலை ஆகியவற்றையும் மேம்படுத்துகின்றது.

தற்போது, சந்தைகளில் 'தூய்மையான நெய்' என்ற விளம்பர பலகைகளுடன் இருக்கும் கடைகளைபோல் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எந்த கடைகளையும் பார்த்ததில்லை. ஆனால், இன்று இப்படி விளம்பரப் படுத்தினால்தான் பணம் கிடைக்கும் என்பதால் இதைப் போன்ற கடைகள் பெருகிவருகின்றன.

யோகா சனத்துக்கும் இதே நிலை வந்து விடக்கூடாது. நான் கற்றுத்தரும் யோகாசனம் தான் சிறந்தது. மற்றவர்களிடம் போய் வெறும்மூக்கை பிடித்து உட்கார்ந்திருப்பதற்காக ஏன் பணத்தை செலவழிக் கின்றீர்கள்? என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு யாரும் போய்விட கூடாது. ஏனெனில், யோகாசனம் என்பது வணிகம் சார்ந்ததோ, அமைப்பு சார்ந்ததோ அல்ல. இது, ஆழ்மனம் சார்ந்த அரியகலையாகும்.

யோகாசனத்தை விலைப் பொருளாக்க முயன்றால், இந்தகலைக்கு நாம் மிக அதிகமாக சேதம் ஏற்படுத்தி யவர்கள் என்றாகி விடுவோம். யோகா என்பது கடைசரக்கு அல்ல. அது விளம்பரத்தின் மூலம் விற்கப்படவேண்டிய பொருளும் அல்ல. புராதாண சிறப்புவாய்ந்த இந்தக் கலை எந்த ஒருதனிப்பட்ட நபருக்கோ, சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ சொந்தமானத அல்ல; இந்த உலகம் முழுவதற்குமே சொந்தமானது.

டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.