பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டங்களாக பல்வேறு சமுதாய வளர்ச்சி திட்டங்களை அறிமுகம்செய்து வருகிறார். அவரது திட்டங்களில் ஸ்டார்ட் சிட்டிஸ், 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டம் மற்றும் 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு ஆகிய மூன்றும் முக்கிய திட்டங்களாகும்.

இதில் 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கு , கடந்த ஏப்ரல் மாதம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. அதுபோல அனைவருக்கும் வீடுதிட்டத்துக்கு கடந்த 17–ந் தேதி மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து இந்த 3 திட்டங்களின் தொடக்கவிழா, வருகிற 25–ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி விழாவில் கலந்து கொண்டு 3 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

2022–ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் 2 கோடி ஏழைகள் பயன் அடைவார்கள். இதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி செலவிடும். இந்தநிதி 7 ஆண்டுகள் செலவிடப்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றபடும்.

அது போல ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடி செலவிடப்படும். இந்ததிட்டத்தில் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.100 கோடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.500 நகரங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்தியஅரசு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்ய உள்ளது.

Tags:

Leave a Reply