சர்வதேச யோகாதின கொண்டாடத்தின் போது யோகாவை உலகளவில் பரப்ப சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று உலகளவில் சர்வதேச யோகாதினம் கடைபிடிக்கப்பட்டது. ஐ.நாவில், அதன் பொதுச்செயலாளர், பான் கி மூன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு யோகா தினத்தை கடைபிடித்தனர்.

இதில் இந்திய ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்று யோகாசனங்களை அனை வருக்கும் பயிற்சியளித்தார். இதில், பங்கேற்று பேசிய பான் கி மூன், அற்புதமான யோகா கலையை உலகளவில் எடுத்துச்சென்ற நரேந்திர மோடி அரசை பாராட்டுவதாக தெரிவித்தார்.

எத்தனையோ சர்வதேச தினங்களை பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த யோகாதினம் உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் எங்களை உணரச்செய்துள்ளது யோகா தினம் என பான் கி மூன் பாராட்டி உள்ளார்.

Tags:

Leave a Reply