பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

கூட்டத்தில் தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கிபேசினார். அவர் பேசியதாவது:–

மத்திய அரசு ஏழைகளை பற்றியும், விவசாயிகளை பற்றியும் எப்போதும் சிந்தித்துசெயல்பட்டு வருகிறது. இந்தியாவில் அனைவருக்கும் வங்கிகணக்கு ஏற்படுத்தியது இந்த ஆட்சியில்தான்.

நமது இந்திய நாட்டை வளர்ச்சிபாதையில் எடுத்து செல்லவே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் சென்று வருகிறார். இலங்கை தமிழர்கள் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகவும் பாசமாக உள்ளனர். அவர்மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நரேந்திர மோடியால் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வு ஏற்படும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய நாட்டுமக்களுக்கு நல்லது செய்யவே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி வருகிறார். இதனால் இந்தியா வளர்ச்சிபாதையை நோக்கி செல்லும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply