நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிரமாண்ட யோகா பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்களே முகாம்களை முன்னின்று நடத்தினர்.

சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலத் தலைநகரங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சிறப்புயோகா முகாம்கள் நடத்தப்பட்டன. மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நடைபெற்ற யோகா முகாம்களில் பங்கேற்றனர். அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்- லக்னோ, ரவி சங்கர் பிரசாத்- மனோகர் பாரிக்கர்- மீரட், கொல்கத்தா, ஜே.பி.நட்டா-ஹைதராபாத், நிதின் கட்கரி-நாக்பூர், சுரேஷ் பிரபு- கொச்சி ஆகிய நகரங்களில் யோகா முகாம்களை முன்னின்று நடத்தினர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்களே யோகாபயிற்சியில் ஈடுபட்டனர். குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் அகமதாபாத் முகாமில் பங்கேற்றார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் யோகாமுகாம்களை நடத்தினர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற யோகா முகாமில் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியபோது, யோகா தினத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply