அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும், இல்லையெனில் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கநேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு அலுவலகங்களில் காலம் தவறாமையை உறுதி செய்ய அனைத்து மத்திய அரசு அமைச்சரவைக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடிதம் எழுதியுள்ளது. "வழக்கமாக அலுவலகத்திற்கு கால தாமதமாக வருவது அரசு ஊழியர்களுக்கு சரியானதா என்று பார்க்கப்படும், இதுபோன்ற அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படலாம். அனைத்து தரப்பிலும் உள்ள அரசு ஊழியர்களிடமும் காலம் தவறாமையான வருகைப்பதிவேடு கவனிக்கப்படும்," என்று மத்திய அரசு ஊழியர்கள் பயிற்சித் துறை தெரிவித்து உள்ளது.

நாடுமுழுவதும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களால் கடை பிடிக்க வேண்டிய காலம் தவறாமையின் அவசியம் குறித்து தேவைப்படும் போது எல்லாம் குறிப்புகள் அவ்வபோது அனுப்பப்படும். "ஊழியர்கள் காலம் தவறாமையை உறுதி செய்வது என்பது அமைச்சகங்கள், துறை மற்றும் அரசு அலுவலங்களைளின் பொறுப்பாகும்," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலங்களில் கைமுறை பயன் பாட்டை தவிர்க்க மத்திய அரசு ஆதார் கார்டுடன் இணைப்புக் கொண்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு ஏடு(AEBAS) முறையை அரசு அலுவலங்களில் கொண்டு வந்துள்ளது. ஏ.இ.பி.ஏ.எஸ். முறையானது காலம் தவறாமையை உறுதி செய்ய அமைச்சகங்கள் மற்றும் அலுவலங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருமணி நேரத்திற்கு மேல் கால தாமதமாக அலுவலகத்திற்கு வருதல் என்பது மாதத்திற்கு இரண்டு முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான காரணம் அலுவலகத்தில் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் ஏற்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:

Leave a Reply