நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டு 40வது ஆண்டுகள் ஆகும் நிலையில் "நமது ஜனநாயகத்தின் கொள்கைகள் மற்றும் உயிர்த்துடிப்பை மேலும் வலுப்படுத்த நம்மால் முடிந்தவரை அனைத்தையும் செய்வோம்," என்று பிரதமர் மோடி டுவிட் செய்து உள்ளார்.

நாட்டில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு 40-வது ஆண்டுகள் ஆகும்நிலையில், இன்று காலையில் டுவிட்டரில் அவர் மேலும் கூறியதாவது , "நமது ஜனநாயகத்தின் கொள்கைகள் மற்றும் உயிர்த் துடிப்பை மேலும் வலுப்படுத்த நம்மால் முடிந்த வரை அனைத்தையும் செய்வோம்," என்று கூறிஉள்ளார். இந்தியாவின் இருண்டகாலமான நெருக்கடி நிலை பிரகடனத்தின் 40-வது வருடத்தை எட்டியுள்ளோம், நெருக்கடி நிலையைப் பிரகடனம்செய்து அப்போதைய அரசியல் தலைவர்கள் நமது ஜனநாயகத்தை நசுக்கிவிட்டனர்.

ஜெயபிரகாஷ் நாராயண் அழைப்பால் ஈர்க்கப்பட்ட ஆண்களும் ,பெண்களும் சுயநலமின்றி, நமது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இயக்கத்தில் தாங்களாகவே குதித்தனர். லட்சக்கணக்கான மக்கள் நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்ததில் நாம் பெருமை அடைகிறோம், அவர்களின் முயற்சியின் காரணமாக தான் நமது ஜன நாயகமானது காப்பாற்றப்பட்டது. தனிப்பட்ட முறையில், நெருக்கடி நிலையானது பல பழைய நினைவுகளை எனக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது. ஒரு இளைஞராக நெருக்கடி நிலை எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பலவற்றை கற்றுக் கொண்டேன். ஜனநாயகத்தை மீ்ட்க வேண்டும் என்ற ஒரேநோக்குடன் போராடிய தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற நெருக்கடி நிலையானது பிரகடனம் உதவியது.

முன்னேற்றத் திற்கான சாவியே உயிர்த் துடிப்பான சுதந்திர ஜனநாயம் ஆகும். நமது ஜன நாயகத்தின் கொள்கைகள் மற்றும் உயிர் துடிப்பையும் மேலும் வலுப்படுத்த நம்மால் முடிந்த வரை அனைத்தையும் செய்வோம், என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply