40 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்காக எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டதையும், இந்நாடே ஜெயிலாக மாற்றப் பட்டதையும் யாராலும் மறக்கமுடியாது. ஜனநாயக அமைப்பின் கீழ் நாம் அனைவரும் செழிப்புடன் வாழவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

ஜனநாயகம் மீண்டும் மலர காரணமான ஜெயப் பிரகாஷ் நாராயணனுக்கு நினைவிடம் கட்டப்படும். ஜன நாயகத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அது ஈர்ப்புசக்தியாக இருக்கும்.

இந்தியாவின் வளர்ச்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக இன்று 3 புதியதிட்டங்கள் தொடங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இந்த நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும். இதன் மூலம் சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழ்நிலை உருவாகும்.

அடல் நகர்ப்புற உருவாக்கம் மற்றும் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின்கீழ் 500 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருலட்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட இந்நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்படும்.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகள் 2 கோடிபேர் நவீன வீடுகளை பெறுவார்கள். ஒரு நகரம் எப்படி மேம்பாடு பெறவேண்டும் என்பதை தனியார் நில மேம்பாட்டாளர்கள் முடிவு செய்யக் கூடாது. அதை அந்த நகரத்தில் வசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

அனைவருக்கும் வீடுதிட்டம் மூலம் தியாகிகளின் கனவு நனவாக போகிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

முன்பு மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியது. இது பற்றி நாடெங்கும் மக்களிடம் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தின. இதற்காக நான் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

3 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.