வீடு வாங்குவோரை பாதுகாக்கும் விதமாக , மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடுதிட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.

வீடு வாங்குவோரை பாதுகாப்பது அரசின்கடமை. இதுதொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும். வாயையும் வயிற்றையும் கட்டி தாங்கள் சேமிக்கும் பணத்தை வீடுவாங்க செலவிடும் மக்கள் ஏமாற்றப்பட்டால் எல்லாமே பறிபோய் விடுகிறது. இதை தடுக்கும் விதமாக புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply