பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக. அரசு, ''டிஜிட்டல் இந்தியா'' திட்டத்துக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றும் இந்ததிட்டத்துக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல்கொடுத்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளையும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்து பொருளா தாரத்தை மேம்படுத்துவது இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்ததிட்டத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவிட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டால் நாட்டுமக்கள், அரசின் சேவைகளை மிக எளிதாக பெறமுடியும். அதோடு நவீன தகவல்தொடர்பு தொழில் நுட்பத்தை குக்கிராமங்களில் வசிப்பவர்களும் மிக எளிதாக பயன் படுத்த முடியும்.

மிகசிறப்பான இந்த திட்டத்தின் தொடக்கவிழா வரும் 1ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி விழாவில் கலந்துகொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Tags:

Leave a Reply