குவைத், பிரான்ஸ், துனிஷியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது…

பிரான்ஸ், குவைத் மற்றும் துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான குடும்பங் களுக்கும் அவர்களை இழந்துவாடும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மனித இனம் அமைதி, சகோதரத்து வத்தால் மட்டுமே முன்னேற முடியும். பயங்கரவாதம், வன்முறையால் முன்னேறமுடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply