இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது சரியா? என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டதன் 40-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு மேலும் பேசியதாவது:

அவசரநிலைக் காலத்தில் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் காங்கிரஸ் அநீதி இழைத்தது. மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப் பட்டன. ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது. ஆனால், அதற்காக, காங்கிரஸ்கட்சி இது வரை மன்னிப்பு கோரவில்லை.

எனவே, அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது சரிதானா? என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளரான ஆர்கே.தவண், "சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவே அவச ரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது' என்று அண்மையில் கூறினார். இதுபோன்ற கருத்துகளையே காங்கிரஸ் தலைவர்களும் கூறிவருகின்றனர்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டதற்காக, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், அவசரநிலைக் காலத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், அதை வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் எந்த அமைச்சர்மீதும் ஊழல் புகார் இல்லை. மக்கள் நலனை கருத்தில்கொண்டு, நாட்டின் வளர்ச்சியில் கவனம்செலுத்தி வருகிறோம். ஆனால், லலித் மோடி விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவருகின்றன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என அனைவரும் அறிவார்கள் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.