அரசியலில் நம்பகத்தன்மை மிகவும் அவசியம். வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கும் வரைதான் அரசியல் தலைவர்கள் வாழமுடியும். 1996ம் ஆண்டு சிபிஐ என் மீது ஹவாலா பணமோசடி வழக்கு பதிவு செய்தனர். அதற்காக நான் வருத்தப்பட வில்லை. அதனால் 2 ஆண்டுகள் நான்

தேர்தலிலும் போட்டியிட வில்லை. பதவி விலகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. என் வாழ்க்கையில் நான் எப்போதும் மனசாட்சி சொல்வதை கேட்டுத்தான் நடந்துள்ளேன்.

அப்போது சக எம்.பி., இருந்த வாஜ்பாய் என்னை பதவி விலகசொல்லாத போதும், நான் எனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், எனக்குதெரியும், நான் தவறு ஏதும் செய்ய வில்லை என. அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை. அப்போதிருந்த நரசிம்மராவ் அரசு வேண்டுமென்றே இவ்வழக்கில் என் பெயரைசேர்த்தது. ஊழல் இல்லாதது தான் பா.ஜ.,வின் மிகப் பெரிய பலம்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அத்வானி அளித்த பேட்டி

Leave a Reply