பொது இடங்களில் குப்பை கொட்டினால், சிறு நீர் கழித்தால் அபராதம் விதிக்க மாநிலத்துக்கு, மாநிலம் மாறுபட்ட சட்டவிதிமுறைகள் உள்ளன. இந்த விதிகள் பெயரளவுக்குத்தான் உள்ளதே தவிர 100 சதவீதம் கடுமையான முறையில் கடைபிடிக்கபடுவது இல்லை.

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் நாட்டை சுகாதார மானதாக மாற்ற சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் தூய்மை இந்தியா (குப்பை அகற்றும் போராட்டம்) பிரதானமானது.

எதிர்க் கட்சியினர் இதை கிண்டல் செய்தாலும் பல நகரங்களில் குப்பைகள் அகற்றப்படுவதில் வெற்றி காணப் பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்துக்கு வலிமைசேர்க்கும் விதமாக வெளிநாடுகளில் உள்ளது போன்று ஒருசட்டத்தை கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுசெய்து வருகிறது.

பொது இடங்களில் துப்பினால், சிறுநீர் கழித்தால் அல்லது குப்பைகளை கொட்டினால் அபராததொகையுடன் தண்டனை வழங்க சட்டஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாடெங்கும் உள்ள நகர சபைக் குட்பட்ட பகுதிகளில் இருந்து பெரியநகரங்கள் வரை இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் துப்புபவர்கள், சிறுநீர் கழிப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகமே அபராதம் விதிக்க இந்த சட்டவிதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் தேவைக்கு ஏற்ப மாநில அரசுகள் இந்தசட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படும் என தெரிகிறது.

Tags:

Leave a Reply