"நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை உடனடியாகத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது; நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இருந்து இதைத் தொடங்க வேண்டும்'

விவசாயிகளுக்கு தரமான விதைகள், தேவையான தண்ணீர், மின்சாரம், விளை பொருள்களுக்கு சரியான விலை, அவற்றை சந்தைப் படுத்துவதற்கு சரியான இடம் உள்ளிட்டவை கிடைப்பதில் இன்று வரையிலும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.

இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை நாம் உருவாக்கா விட்டால், விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவும், அதை நவீன மயமாக்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முதலாவது பசுமை புரட்சியை நாம் கண்டோம். தற்போது, எந்த விதத் தாமதமும் இன்றி இரண்டாவது பசுமை புரட்சியை உடனடியாக தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் பசுமை புரட்சி எங்கே சாத்தியமாகும்? உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலும், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில் இருந்தும் தான் தொடங்க வேண்டும். அதனால் தான், விவசாய வளர்ச்சிக்கு வித்திடும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தை ஜார்க்கண்டில் அரசு அமைக்கிறது.

ஆய்வுக் கூடங்கள் அமைப்போம்: "ஒருதுளி, ஏராளமான விளைச்சல்' என்ற நிலையை அடைய வேண்டுமென்றால் விதை, தண்ணீர், உரத்தேவைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்காக, இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஆய்வு கூடங்களை அரசு அமைக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகும்.

நாட்டின் பருப்பு வகைகளின் உற்பத்தியில் தற்போது பற்றாக் குறை நிலவுகிறது. இதனால், பருப்பு வகைகளின் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசுசார்பில் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் நிலம் இருக்குமானால், அதில் 4 ஏக்கரில் மற்றபயிர்களைப் பயிரிடுங்கள். மீதமுள்ள ஓர் ஏக்கரிலாவது பருப்பு வகைகளை விவசாயிகள் உற்பத்தி செய்யவேண்டும்.

நாட்டில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. அதேவேளையில், பால் உற்பத்தி குறைவாக உள்ளது. இந்நிலை தலைகீழாக மாறவேண்டும். இதற்காக, விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் கவனம்செலுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்களது நிலத்தில் மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உதவியாக "மண்வள அட்டை' வழங்குவதுடன், தரமான விதை, போதுமான மின்சாரம், நீர்ப்பாசனவசதி ஆகியவற்றை அளிப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படா விட்டால், விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, ஒவ்வொரு ஹெக்டேரிலும் கூடுதல்விளைச்சல் காண்பதற்கான வேளாண் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான அடிக்கல்லை நாட்டிப் பேசியபோது

Leave a Reply