தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் மக்கள் தாக்கப்பட்டிருக் கிறார்கள். காவல்துறையினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள், கடைகள், மருத்துவ மனைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன இது மிகவும் கண்டனத்திற்குரியது….

காவல் விசாரணைக்கு இட்டுச் செல்லப்பட்டவர் இறந்து இருப்பது கவலை அளிக்கக்கூடியது கண்டனத்திற்குரியது. ஆனால் அதே நேரத்தில் சட்டத்தை தன் கையில் எடுத்து ஆம்பூர் நகரமே சூறையாடப்பட்டுவருவது வரவேற்கத் தக்கது அல்ல….

காவலர்கள், பெண் காவலர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்… காவல்துறைக்கே காவலும் பாதுகாப்பும் அற்ற நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது என்பது வேதனை. நிலமையை ஆராய வந்த மாவட்ட ஆட்சியரை கல்லெறி கலாட்டாவிலிருந்து பாதுகாப்பதே பெரும் பாடாகியிருக்கிறது. ஆக காவலருக்கும் பாதுகாப்பு இல்லை மாவட்ட ஆட்சியருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஆரோக்கியமான சூழல் இல்லை.

அதுமட்டுமல்ல ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசிய பின்பு அங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. வன்முறைக்கு அவரின் பேச்சுக் காரணமா? என்பதையும் தீர விசாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கு யார் தூண்டுதலாக இருந்தாலும் அது தடுக்கப்பட வேண்டும்.

அந்த நகரில் ஜவகருல்லா அவர்கள் சுதந்திரமாக கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் இந்த சூழ்நிலை தமிழகத்தில் மறைமுகமாக எதை சுட்டிக் காண்பிக்கிறது? எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் தமிழகத்தில் சில தலைவர்கள் இத்தகைய கலவரம் நடந்தும் ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஆக, யாராக இருந்தாலும் சட்டம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் இன்று சட்டத்தை கையாள்பவர்களே தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக தமிழக மக்களிடம் நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த
வேண்டியது இந்த அரசின் கடமை, அதை உணர்ந்து தமிழக அரசு உடனே செயல்படவேண்டும். அமைதி நிலவ வேண்டும் என்றும் அமைதியைக் குறைப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

குறிப்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரின் கூட்டத்திற்கு பின்பு அங்கு வன்முறை நடந்திருக்கிறது என்று உள்நோக்கமில்லாமல் அமைதி வேண்டும் என்ற நோக்கில் நான் சொன்ன கருத்திற்கு என்மீது வழக்குபோடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜவகருல்லா கூறியிருக்கிறார்.

எந்த வழக்கையும் நாங்கள் சந்திக்க தயார் தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும். வேற்றுமைகள் வேரூன்றிவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
மாநிலத்தலைவர், தமிழக பா.ஜ.க.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.