ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்ட சர்வதேச யோகாதினம் உலக மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யோகா செய்தது அனைவராலும் யோகா கலை ஏற்று கொள்ளப்பட்டதை காட்டுகிறது. உலகம் முழுவதும்

யோகாவுக்கு கிடைத்தவரவேற்பு, ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மரியாதை. சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் மரம் நட வேண்டும், அதுமட்டுமல்லாமல், நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மழை நீர் சேமிப்பு திட்டத்தை வலியுறுத்தி மக்களிடையே அரசுசார்பில் பிரசாரம் செய்யப்படும்.

கடந்த மான்கிபாத் நிகழ்ச்சியின் போது, மக்கள் அனைவரும் தங்கள் சுற்றுலா அனுபவங்களை incredible india பக்கத்தில் பகிர்ந்துகொள்ள கேட்டிருந்தேன். ஏராளாமானோர் தங்களின் புகைப் படங்களை ட்விட்டர், இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டில் ஆண்களுக்கு இணையான பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துகொண்டே வருவது மிகவும் கவலை தருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாலின விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக ஹரியானாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு மிகவும் கவலை தரும் விஷயமாகவும், தீவிரம் காட்டவேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளை காப்பதற்காகவே அரசு பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ). இதற்காகவே, ஒவ்வொருவரும் தன் மகளுடன் செல்பி புகைப்படம் போட்டியை தொடங்கி வைத்தேன். இந்தபோட்டியில் ஏராளமான மக்கள் தங்கள் மகளுடன் செல்பி எடுத்து அனுப்பி வைத்தனர். இந்த செல்பி போட்டியில் தனது மகளுடன் செல்பி எடுத்து அதில் எந்தமொழியிலும் டேக்லைன் எழுதி பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்துக்கு வலுசேர்க்க வேண்டும். 4.5 லட்சம் கழிப்பறை: நாடுமுழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படும் என கடந்த சுதந்திரதின உரையின் போது கூறியிருந்தேன். இந்த இலக்கு அடுத்த சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும். கடந்த 60 ஆண்டுகளாக இந்த திட்டத்தை முடிக்க முடியவில்லை. ஆனால், இன்னும் ஓர் ஆண்டுக்குள் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டும் இலக்கு எட்டப்படா விட்டாலும், கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருக்கிறது. அந்நாள் வெகுதொலைவில் இல்லை.

மத்திய அரசு மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களான அடல்பென்சன் திட்டம், விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை சமீபத்தில் அறிமுகப் படுத்தியது. சமூக பாதுகாப்புக்கு இந்தியா தற்போது மிகச் சிறிய அளவில் தற்போது பணியாற்றி வருகிறது. ஆனால், இந்த 3 திட்டங்களும் அடுத்த, நிலைக்கு கொண்டுசெல்லும். வரும் ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பாக நமது சகோதரிகள் சமூகபாதுகாப்பு திட்டங்களின் பலன்களை பெறுவார்கள். அதற்காக அனைவரும் தங்கள் சகோதரிகளுக்கும், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்த 3 திட்டங்களை பரிசாக அளிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியது

Leave a Reply