ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட பலர் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். அரசியல் கட்சிகளும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் தேர்தல்

ஆணையம் ஒரு வாக்குச் சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு என அறிவித்து உள்ளது. ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்யவேண்டும்.

சென்னையில் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மெட்ரோரெயில் பணிகள் துரிதமாக நடக்க கடந்த ஓராண்டாக மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் மத்திய அரசின் பணியும் முக்கியமானது.

ஊழல்புகார் கூறப்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று அத்வானி பேசிவருகிறார். பா.ஜ.க மந்திரிகளை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசவில்லை. யாரும் ஊழல் செய்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து பேசியிருக்கலாம் என்று பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply