திருமாவளவன் ஜாதி அரசியல் நடத்துகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

.

பாஜக.,வில் புதியதாக இணைந் துள்ளவர்களை கட்சிப்பணியில் இணைத்து செயல்படுத்துவதற்கான அகில இந்திய பயிற்சிமுகாம் டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக டெல்லிசென்ற மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

-பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் நாங்கள் புதிதாக 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அவர்களை கண்டறிந்து, தொடர்புகொள்வதற்கான பயிற்சிகூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் கட்சித் தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக தற்போது நான் டெல்லிசெல்கிறேன்.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பிஜேபியைப் பொறுத்தவரை நாங்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் நடத்திவருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஜாதி அரசியல் நடத்துகிறார்.

Tags:

Leave a Reply