பத்திரிகையாளர் சோ.ராமசாமி, உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'கடந்த ஆண்டில் இருந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார்.

இந்நிலையில், நேற்று பகல் 3 மணியளவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் பரிசோதனைசெய்து பார்த்ததில், அவருக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,மருத்துவமனைக்கு சென்று சோ.ராமசாமியை பார்த்து நலம் விசாரித்தார்.

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியையும் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் உடல் நலம் விசாரித்தார்.

Tags:

Leave a Reply