பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் வெற்றிகளால் காங்கிரஸ்கட்சி நிலை குலைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

எதிர்க் கட்சிகளுடன் இணைந்து செயல்பட அரசு விரும்பு வதாகவும், அதற்காக அக்கட்சிகளின் அர்த்தமற்ற கோரிக்கைகளை ஏற்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செüஹான் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

பாஜக.,வின் இளைஞரணியான, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சுஷ்மா ஸ்வராஜ் இந்ததேசத்தின் மிகப்பெரிய சொத்து. அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனாலும், அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே வேளையில், வசுந்தராவும், செüஹானும் மிகச்சிறப்பாகச் செயல்படுபவர்கள். முந்தைய ஆட்சியின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் 6 பேர் பதவி விலகநேரிட்டதை மனதில் வைத்துக் கொண்டு, இதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களை காங்கிரஸ் முன்வைக்கிறது.

ஆனால், அந்த அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. கடவுளின்வரம் மோடி: இந்த தேசத்துக்கு கடவுள் தந்த வரம்தான் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையில், வங்கதேச – இந்தியநில எல்லை ஒப்பந்தம், நாகாலாந்து அமைதி ஒப்பந்தம், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்து யுரேனியஇறக்குமதி உள்ளிட்ட வெற்றிகளை தேசம் அடைந்துள்ளது.

மோடி அரசின் வெற்றியால் காங்கிரஸ் கட்சி நிலை குலைந்து போயுள்ளது. இதனால் தான், நாடாளுமன்ற அலுவல்களை முடக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயல் கின்றனர்.
பொறுமையிழக்கும் மக்கள்: நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும். வெள்ள பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெறவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இதெல்லாம் நடை பெறாததால் அவர்கள் பொறுமை இழந்துள்ளனர் என்றார் வெங்கய்ய நாயுடு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.