கூகுள்' தலைமை செயல்அதிகாரி பதவியில் தமிழரான சுந்தர்பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க கூகுளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரசித்திபெற்ற தேடல் இணையதளம் 'கூகுள்'. இந்த இணையதள நிறுவனத்தின் தாய்நிறுவனமாக 'ஆல்பபெட்' என்ற நிறுவனம் தொடங்கபட்டுள்ளது. இந்த ஆல்பபெட்டின் ஒரு அங்கமாக 'கூகுள்' இருக்கும்.

இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது தலைமைசெயல் அதிகாரி பதவிக்கு சென்னை தமிழர் சுந்தர் பிச்சை (வயது 43) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உலகளாவிய கவுரவம் ஆகும்.

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 'டுவிட்டர்' சமூக வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''வாழ்த்துகள் சுந்தர் பிச்சை. கூகுளில் உங்கள் புதியபங்களிப்புக்கு எனது நல்வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றிதெரிவித்த சுந்தர் பிச்சை அவரை சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் .அங்கு முக்கிய நிறுவன அதிகாரிகளை சந்திக்க இருக்கும் மோடியை சுந்தர்பிச்சையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply