பாராளுமன்றம் ., முடக்கப்படுவதற்கு நான் காரணமில்லை. அரசியல் உள்நோக்கத் துடனேயே என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அங்கு அரசியல் சர்க்கஸ் நடந்து கொண்டுள்ளது. பாராளுமன்றம் அரசியலுக்காக காங்கிரஸ் என்னை பயன் படுத்துகிறது என ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி பேட்டி அளித்துள்ளார்.

தனியார் டிவி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்த லலித்மோடி, ராபர்ட் வத்ரா பற்றியும் மற்ற ஊழல்கள் பற்றியும் ராகுல்தான் கவலை பட வேண்டும். பாராளுமன்ற முடக்கப்படுவதற்கு நான் காரணமல்ல. என்னை வைத்து அங்கு ஒருசர்க்கஸ் நடக்கிறது.சோட்டா சாகீல் மற்றும் தாவூத்தான் கிரிக்கெட் சூதாட்டம் செய்தனர். அதில் மெய்யப் பனுக்கும் தொடர்புண்டு. ராஜஸ்தானில் நான் தனிப்பட்ட அரசு எதையும் நடத்த வில்லை. வசுந்தரா குடும்பமும், எங்கள் குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். என் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் எனது வழக்கறிஞர் பதிலளிப்பார்.

பாதுகாப்பு காரணங்களால் என்னால் இந்தியா வரமுடியாது. இதுவரை எனக்கு எந்த ரெட்கார்னர் நோட்டீசும் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவினர் விரும்பினால் இங்கு வரட்டும். என் மீது எந்த தவறும் இல்லை. நிழலுலக தாதாக்களால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகவேண்டும் என்ற கடிதத்தை தவிர அமலாக்கப் பிரிவின் அனைத்து கடிதங்களுக்கும் நான் பதிலளித்துள்ளேன். அமலாக்க பிரிவு ஏன் சட்டநடவடிக்கைகளை பின்பற்றவில்லை? பிசிசிஐ.,யில் எனது பங்கு ஏதுமில்லை.

சர்வதேச விளையாட்டு குழுமத்திடம் இருந்து நான் பணம்பெற்றேன் என்பது அபத்தமானது. கிரிக்கெட் அரசியல் வெளிவர துவங்கியதும். அதில் என்னை காரணம்காட்டி, அரசை தாக்கும் முயற்சி நடந்து வருகிறது. வசுந்தரா குடும்பத்துடன் நீண்டகால வர்த்தக உறவு உள்ளது. அவரது மகன் துஷ்யந்த் உடனான சொத்து பகிர்வில் எதையும் நான் மறைக்க வில்லை. அரசியல் நடத்துவதற்காக காங்., என்னை பயன்படுத்திக் கொள்கிறது.

சுஷ்மா எனக்கு உதவியது மனிதாபிமான அடிப்படையிலானது மட்டுமே. சுஷ்மாவின் குடும்பம் எனக்கு நெருக்கமானது. சென்னை ஓபன்டென்னிஸ் விவகாரத்தில் தனக்கு சாதகமாக நடக்க உதவுமாறு சிதம்பரம் என்னை கேட்டுக்கொண்டார். சிதம்பரம் குடும்பம் என்னிடம் உதவிகேட்டது உண்மைதான். சிதம்பரம் மகன் கார்த்திக்கு நான் உதவினேன். சரத்பவார் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவ்வாறு லலித் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.