இந்தியா, தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறது. வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்த அனைவரும் ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தே தீர வேண்டும்.

அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாக அமையும். வன்முறை யாருக்குமே நன்மை செய்யாது. பயங்கரவாதத்துக்கு எதிரானபோர் குறித்து இங்கு விடுக்கப்படும் செய்தி, சம்பந்தப்பட்ட நாடுகளை சென்றடையும் என்று நம்புகிறேன். பயங்கர வாதத்தில் ஈடுபடுபவர்கள், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். எனினும், இதனுடைய தாக்கத்தை உலகம் தற்போதுதான் உணர்ந்து வருகிறது.

பயங்கரவாதத்துக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. அதை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பதை அனைத்து நாடுகளும் தீர்மானித்தாக வேண்டும்.

பயங்கரவாதத்தில் நல்லபயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என எதுவும் இல்லை.
பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கும், மனித நேயத்தை நம்புவோருக்கும் இடையிலான போர் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது.

பயங்கரவாதம் என்றால் என்ன? என்பது குறித்தோ, எந்த நாடு பயங்கரவாத நாடு? என்பது குறித்தோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெளிவாக வரை யறை செய்யவில்லை. சர்வதேச பயங்கரவாதம் குறித்து விவாதிக்கும் விரிவானமாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. இது தொடர்பாக, இந்தியாவின் கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் ஆதரித்துள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வழக்குகளை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி
வழங்குவதற்கான நலநிதியும், இணைய தளச்சேவையும் தொடங்கப்பட்டுள்ளன என்றார் நரேந்திர மோடி.

உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது மாறியுள்ளது அதனை பயன்படுத்தி நம் நாட்டின் வளர்ச்சியை புது உச்சத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும். இந்த ரக்ஷா பந்தனை உங்கள் சகோதரிக்கு ஆயுள் காப்பீடை பரிசளியுங்கள்

தூதரகம் தொடர்பாக உங்களுக்கு இருந்த பல பிரச்சனைகளை போக்க இந்திய அரசாங்கம் 'மடாட் ' என்னும் மின் நகர்விற்கான போர்டலை ஆரம்பித்துள்ளது. எங்கள் முயற்சி இந்தியாவை ஒருபுதிய சிகரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எங்களுடைய நோக்கம். அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதே வங்கதேசத்துடன் இருந்த எல்லை பிரச்சனை ஆகஸ்ட் 1 முதல் தீர்க்கப்பட்டது.

நாங்கள் இப்போது அரக்கத்தனமாக எந்த வேலையும் செய்யவில்லை… அனைவரோடும் தோளோடு தோல் நின்று வேலை செய்து வருகின்றோம். நாம் இந்தியாவின் இரண்டாவது பசுமைபுரட்சிக்கு தயராக இருக்க வேண்டும்.

இந்தியாவில் வாய்ப்புகள் குவிந்துள்ளன மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள். வன்முறை பாதையில் செல்லும் நாடுகள் அனைத்தும் ஒருநாள் கண்டிப்பாக அமைதியை நோக்கி வந்துதான் ஆக வேண்டும். நாங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தொடங்கியுள்ளோம்.. நாங்கள் உலகை அழைக்கின்றோம் வாருங்கள் வந்து 'மேக் இன் இந்தியா' இணைய

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாநிரந்தர உறுப்பினர் ஆக ஐக்கிய அரபு அமீரகம் முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தனர். கோவில் கட்ட இடம் ஒதிக்கீடு செய்த இளவரசர் ஷேக்முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு நன்றி. இந்த அன்பு, மரியாதை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு கிடைத்ததல்ல.. இது இந்திய என்ற தேசத்திற்கு கிடைத்தமரியாதை

உலகில் இந்தியாவின் மரியாதை மாறி வருகிறது. எனக்கு இங்கே கிடைத்த வரவேற்பும் ,மரியாதையும் எனக்கு கிடைத்தது அல்ல 125 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்தது. இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையே 700க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன ஆனால இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வர 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள்தான் கடுமையான உழைப்பாளிகள்.. பல ஆண்டுகளாக நீங்கள் உழைத்து இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்…

வாஜ்பாய் ஜி தலைமையில் இந்தியா செய்த அணு ஆயுத சோதனை இந்தியா பலசிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. வாஜ்பாய் அவர்கள் உதவிக்காக அழைத்தபோது ஐக்கிய அரபு அமீரகதில் வாழும் இந்தியர்கள் தான் உதவினர்

துபை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.